மதுரை : மதுரை மதிச்சியம் சப்பானி, கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டிசெல்வி (28), சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின், முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 12½ பவுன் தங்க நகைகள், திருடு போயிருப்பது தெரியவந்தது. அவர் இது குறித்து மதிச்சியம் காவல் துறையில், புகார் அளித்தார். அதன் பேரில் தல்லாகுளம். உதவி ஆணையர் திரு.சுரேஷ்குமார், தலைமையில் மதிச்சியம் காவல் ஆய்வாளர் திரு . முத்துமாரி, மற்றும் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.வாலிபர் கைது
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி