மதுரை: இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள காவலர்கள் பல சம்பவங்களில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி நினைவுகூருவது நமது கடமையாகும்.
எனவே இன்று 21.10.2018 காலை 07:45 மணிக்கு நீத்தார் நினைவு தின நிகழ்ச்சி மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.Dr.நடராஜன்,IAS., அவர்கள், தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.K.P.சண்முக ராஜேஸ்வரன்,IPS., அவர்கள், சிலைதடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் திரு.பொன்மாணிக்கவேல்,IPS., அவர்கள், மதுரை சரக காவல்துறை துணை தலைவர் திரு.பிரதீப்குமார்,IPS., அவர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன்,IPS., அவர்கள், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.சசிமோகன்,IPS., அவர்கள், காவல் காவல் துணை ஆணையர் குற்றம் திருமதி.ஜெயந்தி,IPS., அவர்கள், காவல் துணை ஆணையர் போக்குவரத்து திரு.அருண் பாலகோபாலன்,IPS., அவர்கள், காவல் துணை ஆணையர் ஆயுதப்படை திரு.முருகேசன்,TPS., அவர்கள், மதுரை மாநகர மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.