மதுரை : மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வரிச்சூர் கிராமத்தில், மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பில் ,புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனிஷ் சேகர், தலைமை வகித்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், திரு. வெங்கடேசன், முன்னிலை வகித்தார். தமிழக வணிகவரி பத்திர பதிவுத்துறை, அமைச்சர் திரு. பி. மூர்த்தி, புறக்காவல் நிலையத்தை, திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட எஸ்.பி. திரு. பாஸ்கரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி. சூரியகலா, ஊராட்சித் தலைவி முத்துலட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை அடுத்து, வரிச்சூர் கிராமத்தில், புதிய திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி