மதுரை: மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ஜஸ்டின்பிரபாகரன் அவர்கள் மதுரை மாநகரில் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட, மருத்துவ அடிப்படை வசதியில்லாத, பாதுகாப்பில்லாத, மற்றும் மனநலம் பாதிக்கபட்ட ஒரு பெண் உட்பட 22 நபர்களை மதுரை மாவட்டம் நாகதீர்த்தத்தில் அமைந்துள்ள அக்க்ஷயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார். மேலும் மேற்படி நபர்களை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளும்படி தொண்டு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்