மதுரை : மதுரை தெப்பக்குளம் ,பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி ( 26), பெயிண்டர். மேலஅனுப்பானடி, பகுதியை சேர்ந்தவர் வெற்றிசெல்வம் (27), துப்புரவு தொழிலாளி. இவர்கள் இருவரும் 10 ஆண்டு முன்பு துப்புரவு தொழிலாளியான, முருகேஸ்வரி, என்பவரை காதலித்து வந்தனர். அதில் ராஜபாண்டியை, அவர் திருமணம் செய்து கொண்டார். இதனால் மனவருத்தம் அடைந்த வெற்றிசெல்வம், அன்றைய தினத்தில் இருந்து காதலியை நினைத்து, தாடி வளர்த்து வந்துள்ளார். மேலும் தான் காதலித்த, பெண்ணை திருமணம் செய்து கொண்டவனை, கண்டிப்பாக தலையை அறுத்து கொலை செய்வேன் என்று சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜபாண்டி மனைவி , கண்டித்து சத்தம் போட்டுள்ளார். அப்போது தன்னை வெற்றிசெல்வம், தான் தினமும் தொந்தரவு செய்து, தவறான தகவலை பரப்புவதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் மீது முருகேஸ்வரி, தெப்பக்குளம் காவல் துறையில், புகார் அளித்தார். அந்த புகாரை விசாரிக்க வெற்றி செல்வத்தை, காவல் நிலையத்திற்கு வருமாறு காவல் துறையினர் , கூறியுள்ளனர். ஆனால் அவர் காவல் நிலையத்திற்கு, செல்லாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, அவரது தம்பி வெற்றிவேல் பாண்டி, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு, அந்த மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி உள்ளனர்.
பின்னர் துணியை கிழித்து, அதனை திரி போன்று வைத்து வெற்றிசெல்வத்தின், வீட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.
உறவினர்கள் சசிகுமார் (31), செல்வபாண்டி (27) , ஆகியோர் இருசக்கர வாகனத்தில், ஏறி மேலஅனுப்பானடி பகுதிக்கு சென்றனர். அங்கு வெற்றிசெல்வம், வீட்டின் முன்பு சத்தம் போட்டு, பெட்ரோலை நிரப்பி பாட்டில் குண்டை, தீ பற்ற வைக்க முயன்றனர். ஆனால் அது தீ பிடிக்கவில்லை. எனவே தீ பற்ற வைக்காமல் பெட்ரோல் குண்டை வெற்றிசெல்வம் வீட்டின் மீது வீசி எறிந்து விட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை காவல் ஆய்வாளர் திரு. பெத்துராஜ், வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி, அவரது தம்பி வெற்றிவேல் பாண்டி, உறவினர்கள் சசிகுமார், செல்வபாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
Related