மதுரை மாவட்டம் : 10-08-19 மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை கைது செய்தனர். மேலூர் அருகே நான்கு வழிச்சாலை ,சாலைக்கிபட்டி பிரிவு அருகே லாரியில் வந்த டிரைவர் முகம்மதுபரீத் என்பவரிடம் ஒரு வழிப்பறி கும்பல் விபத்து நடந்தது போல் நாடகமாடி, அதற்கு உதவி செய்ய வந்த லாரி டிரைவர் முகம்மதுபரீத் என்பவரிடம் இருந்த ரூ-12 ஆயிரத்தை வழிப்பறி செய்து, மினி வேனில் தப்பிச் சென்றனர்.இந்த சம்பவம் மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலூர் இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு விரட்டி சென்று வாக்கிடாக்கியை துப்பாக்கி போல் காண்பித்து கவிராஜா (25) மகேஸ்வரன் (28) கார்த்திக்ராஜா (28) ஆகிய மூன்று நபர்களை கைதுசெய்து, பணத்தை பறிமுதல் செய்து, முகம்மதுபரீத் அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த துரிதமான செயலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N மணிவண்ணன் இ.கா.ப. அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்