மதுரை : சோழவந்தான் பகுதியில் , குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கில் மதுரை, எஸ்.பி. திரு. பாஸ்கரன், தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் முயற்சியில், சோழவந்தான் பகுதி முழுவதும்சுமார் 48 சிசிடிவி கேமராக்கள் அமைத்து குற்ற செயல்களை, கண்காணிப்பு வலைக்குள் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், மது அருந்த தடையாக இருந்ததால், 3 இளைஞர்கள் மது போதையில், சிசிடிவி கேமராக்களை உடைத்தனர். இந்த சம்பவத்தை அதே சிசிடிவி காட்சிகளை கொண்டு , மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர். தொடர் விசாரணையில், மூன்று பேரும் சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த மணிபிரபு, ஆதிபாபு, ரஞ்சித்குமார். ஆகியோர் என்பது தெரிந்து, அவர்களை கைது செய்து , சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி