மதுரை : மதுரை பெருங்குடி, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்-தனமாலினி தம்பதியினர், கணவர் சுரேஷ் மதுரை பொன்மேனி, பி.ஆர்.சி டிப்போவில் கிளர்க்காக, வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில், இருவரும் கல்லூரி படிப்பு, படித்து வருகின்றனர். கணவன் , மனைவி இருவரும் பெரியார் நோக்கி செல்வதற்காக மதுரை, நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, பெரியார் பேருந்து நிலையம் ,செல்வதற்காக மேலஉப்பிலிகுண்டு கிராமத்திலிருந்து, மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த, அரசு பேருந்தை ஓட்டி வந்தவர் திருமங்கலத்தைச் சேர்ந்த முத்துராமன், மற்றும் நடத்துனர் சதீஷ்குமார், ஆகியோர் வில்லாபுரம் வழியாக அரசு பேருந்தை ,ஓட்டி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பேருந்தானது வில்லாபுரம் வெற்றி திரையரங்கம் முன்பு, வந்து கொண்டிருந்தபோது, பேருந்தை முந்திச் செல்வதற்காக கணவன்-மனைவி , வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக, பேருந்து பக்கவாட்டில் விழுந்ததில், பின்னால் உட்கார்ந்திருந்த (43), வயதான தனமாலினி, பேருந்தின் பின் சக்கரத்தில் உடல் மாட்டிக்கொண்டு, அரசு பேருந்து ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கணவன், கண்முன்னே மனைவி உடல் நசுங்கி பலியானது. அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இச்சம்பவம் குறித்து காவலருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கப்பாண்டி, இறந்தவர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ,விபத்து குறித்து வழக்குப்பதிவு, செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போக்குவரத்து துணை ஆணையர் திருமலைக்குமார், நேரில் வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் , தற்போது, விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தை முந்திச் செல்ல பேருந்தின் பக்கவாட்டில், இருசக்கர வாகனம் உரசி பின்னால் அமர்ந்த மனைவி, பேருந்தின் சக்கரத்தில் விழுந்து கணவர் கண் முன்னே, உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி