மதுரை : மதுரை நகரில் கடந்த இரு நாட்களாக, மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது . அதைத் தொடர்ந்து, மாலையில், மதுரை நகரில், சர்வேயர் காலனி, திருப்பாலை, மாட்டுத்தாவணி, கே.கே. நகர் ,அண்ணாநகர், கருப்பாயூரணி, ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்து தொடர்ந்து ,மதுரை நகரில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது .
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி