மதுரை : முனிச்சாலையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை . மதுரை ஏப்ரல்4. முனிச்சாலை இஸ்மாயில்புரம் 12வ து தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் பாலசுப்ரமணியன் 28 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது . சம்பவத்தன்று இதுபோல் தகராறு நடந்துள்ளது . இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த சம்பவம் குறித்து மனைவி ஜோதிமணி கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல மயக்கவியல் டாக்டர் லாரி மோதி விபத்தில் பலி மதுரையில் பரிதாபம் மதுரை ஏப்ரல் 4 பிரபல மயக்கவியல் டாக்டர் லாரி மோதி விபத்தில் பலியானார் . கேகே நகர் காந்தி நகர் கிழக்கு முதல் தெருவை சேர்ந்தவர் டாக்டர் ஜெயம் சுரேஷ் 56. இவர் பிரபல மயக்கவியல் டாக்டர் ஆவார். மதுரையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந் நிலையில் அவர் டூவீலரில்அழகர்கோவில் மெயின்ரோடு மூன்றுமாவடி ரவுண்டானா அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டிரைவர் வாடிப்பட்டி கோட்டைமேடு கல்லானையைச் சேர்ந்த லாரிடிரைவர் கதிரேசன் மகன் சுரேஷ் 34 என்பவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுக்கு காலதாமதமாக வந்த மகனை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை மதுரை ஏப்ரல் 4 மதுரை சாந்தி நகர் ரயில் ஆர் நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ஆனந்த் 22 இவர் தினமும் வீட்டுக்கு காலதாமதமாக வந்திருக்கிறார். இதை தந்தை கண்டித்தார். இதனால் மனமுடைந்த மகன் ஆனந்த் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஆனந்த் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கூடல்புதூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிக்கச் சென்ற சிறுவன் கோயில் குளத்தில் மூழ்கி பலி மதுரை ஏப்ரல் 4 குளிக்கச் சென்ற சிறுவன் கோயில் குளத்தில் மூழ்கி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆணையூர் இமயம் நகரை சேர்ந்தவர் திருப்பதி மகன் அர்ஜூன் 14. இவன் ஆலங்குளம் முனியாண்டி கோவில் அருகே உள்ள கோயில் குளத்துக்கு குளிக்கச் சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியானான். இந்த சம்பவம் குறித்துகூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி