மதுரை : மதுரை விளாங்குடி பகுதி அருகே மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் பாதிக்கும் பணியானது நீண்ட காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் சுமார் 3 தொழிலாளர்கள், இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், ஈரோடு அமராவதி நகரை சேர்ந்த வீறனன் என்ற சதீஷ் என்பவர் காலை முதல் பணி செய்து வந்த போது மதியம் 3 மணி அளவில், எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்படட்டுள்ளது.
இதன் காரணமாக ,சதீஷ் 20 அடி ஆழத்தில் சரிந்து விழுந்த நிலையில், கூச்சலிட்டப் போது தகவலறிந்து அக்கம் பக்கத்தினர், உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வருவதற்கு முன்னதாக ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்பு பணியில், ஈடுபட்டிருந்த போது, தொழிலாளியின் தலை துண்டாக வந்துள்ளது.
இந்நிலையில், சுமார் 1 மணி நேரமாக உடலை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீயணைப்பு துறையினர் உடலை மீட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில், மாநகராட்சி ஆணையர் திரு. சிம்ரன்ஜீத் சிங், மேயர் திருமதி. இந்திராணி, காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கும் போது, விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பார்கள். ஒப்பந்ததாரர் மீது தவறு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா, என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி