சென்னை: அழகு நிலையத்தில் புகுந்து பெண் ஊழியரை கத்தியால் தாக்கி நகை பறித்துச் சென்ற குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகா, வ/27, க/பெ.சக்திகுமார் என்பவர் ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு என்ற முகவரியில் ப்ளூவேல் சலூன் என்ற அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். கார்த்திகா கடந்த 04.08.2019 அன்று இரவு சுமார் 08.45 மணியளவில் மேற்படி அழகு நிலையத்தில் வேலை முடித்துவிட்டு கடையை மூடும்போது 5 நபர்கள் அழகு நிலையத்திற்குள் நுழைந்து கார்த்திகாவின் உடலில் 2 கத்தியால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலி தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து சம்பவ இடத்தினருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோவின் (TN11 AH 2674) பதிவு எண்ணை வைத்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. ராஜேஷ், (26), (Electrician), திவாகர். (22), ராகுல், (23), ஹரிகிருஷ்ணன், (27) ஆட்டோ ஓட்டுனர் , ஜெயின், (23), ஆகியோர்களை (05.8.2019) அன்று விடியற்காலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 சவரன் தங்கச்சங்கிலி, கத்திகள்-2 மற்றும் மேற்படி ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக பணிப்புரிந்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, அயனாவரம் சரக உதவி ஆணையாளர் (பொறுப்பு : கீழ்ப்பாக்கம் சரகம்) திரு.எம்.பாலமுருகன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் திரு.P.பொன்ராஜ் (G-3 கா.நி.), திரு.R.விநாயகம் (K-6 ச & ஒ), திருமதி.P.சாந்திதேவி (K-6 குற்றப்பிரிவு), சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.V.மனோகரன், தலைமைக் காவலர்கள் S.செந்தில்குமார் (த.கா.35179), B.சுபாஷ் சந்திரபோஸ் (த.கா.28110), முதல்நிலைக் காவலர்கள் S.மகேஷ் (மு.நி.கா.27932), N.பிரபு (மு.நி.கா.28696), காவலர்கள் A.நாகூர் மீரான் (கா.43545) மற்றும் B.மதியழகன் (கா.38043) ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (07.08.2019) நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.