மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 24.10.2019 – ந் தேதியன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் லாரிகள், கனரக வாகனங்கள் இலகுரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11.00 மணிமுதல் மறுநாள் (25.10.2019 ) காலை 06.00 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
25.10.2019 மற்றும் 26.10.2019 ஆகிய தேதிகளில் பகல் மற்றும் இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக்குள் லாரிகள், கனரக வாகனங்கள் இலகுரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. நேதாஜி ரோடு, மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, மேலாவணி மூல வீதி, கீழாவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதி ஆகிய வீதிகளில் பொதுமக்களின். நலனனுக்காக இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. பேலஸ் ரோடு, கீழமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
வாகனங்கள் நிறுத்தம் செய்ய அனுமதி இல்லை. திருவிழா நாட்களில் அதிகமாக நுகர்வோர் வருகின்றபடியால் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்த வேண்டாம் எனவும் நுகர்வோருக்கு மட்டும் நிறுத்த அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரை மாநகர பொதுமக்கள், வியாபாரப் பெருமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் வியாபார சங்கபிரமுகர்கள் அனைவரும் மதுரை மாநகர பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்டுள்ள தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்புத் தரும்படி மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை