மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக தொடர் கடும் நடவடிக்கைகள் சட்டப்படி எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் சேடபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லிகுண்டம் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சேடப்பட்டி சார்பு ஆய்வாளர் திரு பாலசுப்பிரமணி சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பாலமுருகன் (28) நபரை கைது செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக சேடப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி கைது செய்யப்பட்டனர் அவரிடம் இருந்து கஞ்சா 41 Kg பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி