மதுரை: கடந்த 19.10.2019 ம் தேதி இரவு மதுரை மாநகர், வில்லாபுரம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் இராணுவ வீரர் ராஜீ என்பவரது அலைபேசி எண்ணிற்கு யாரோ அவரது மகன் பார்த்திபன் (M.B.A பட்டதாரி) என்பவரை கடத்திவிட்டதாகவும் அதற்கு பணம் 20 லட்சம் கொடுத்தால்தான் உயிருடன் விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது மகனை மீட்டுத்தரும்படி அவனியாபுரம் காவல் நிலையத்தில் 20.10.2019 – ம் தேதி கொடுத்த புகாரின் பெயரில் அவனியாபுரம் காவல் நிலைய குற்ற எண் 999/2019 பிரிவு 364(A) IPC படி ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கினை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு.இரமணி அவர்கள் புலன் விசாரணை மேற்கொண்டார்.
குற்றவழக்கில் தொடர்புடைய நபர்களை விரைவில் பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பெயரில் காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு.சசிமோகன் இ.கா.ப அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் திரு. இராமலிங்கம் அவர்களின் தலைமையில் ஒரு தனிப்படையினரும், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு.இரமணி அவர்களின் தலைமையில் ஒரு தனிப்படையினரும் மற்றும் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் திரு.பெத்துராஜ் அவர்களின் தலைமையில் ஒரு தனிப்படையினரும் அமைக்கப்பட்டு பணத்திற்காக ஆள்கடத்திய நபர்களை தேடிவந்த நிலையில் 20.10.2019ம் தேதி மாலை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. இரமணி அவர்களின் தனிப்படையினர் உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜ்குமார், திரு சக்திமணிகண்டன், திரு.சண்முகநாதன் ஆகியோர்கள் சேர்ந்து எதிரியான பாலமுருகன் 22/19, த/பெ.முத்துக்கருப்பன் என்ற தனுஷ் , சோலையழகுபுரம் முதல் தெரு, வில்லாபுரம், மதுரை என்பவரை செம்பூரணிரோடு அருகில் வைத்து கைது செய்தனர்.
.அண்ணாநகர் காவல் ஆய்வாளர் திரு.பெத்துராஜ் அவர்களின் தனிப்படையினர் வெள்ளக்கல் அருகில் வைத்து, கடத்தப்பட்டவரின் அம்மா திருமதி.தமிழ்செல்வியிடமிருந்து பணத்தை பெற்று தப்பி ஓட முயன்ற எதிரிகளான சரவணன் த/பெ ராஜா, TNHP காலனி, மேல அனுப்பானடி, மதுரை மற்றும் முருகன் 21/19 த/பெ சொக்கலிங்கம் வில்லாபுரம், மதுரை ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம், மிரட்டலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், கத்தி மற்றும் அவர்கள் பெற்ற பணையத் தொகை ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும் கடத்தப்பட்ட பார்த்திபன் மீட்கப்பட்டார் . இவ்வழக்கில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு நான்கு சக்கர வாகனங்களும், இரண்டு இரு சக்கர வாகனங்களும், மற்றும் இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக உள்ள எதிரிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
.ஆள்கடத்தல் கும்பலை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து கடத்தப்பட்ட பார்த்திபனை மீட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை