மதுரை: மாநகர் நேற்று (21.08.2019) E3-அண்ணாநகர் (ச&ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திலீபன் என்பவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று ரோந்து காவலர்களுடன் குருவிக்காரன் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ரோந்துபணி செய்தபோது ஆட்டோவில் வெள்ளை நிற பையுடன் இருந்த ஒருவர் காவலர்களை பார்த்தவுடன் ஆட்டோவுடன் தப்ப முயன்றவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்தபோது அவர் மதுரை மாவட்டம் பெருங்குடி அம்பேத்கார் நகரை சேர்ந்த பூமி என்பவரது மகன் தங்கபாண்டி 37/19, என தெரியவந்தது மேலும் அவர் கஞ்சா விற்பனை தொழில் செய்வதையும் ஒப்புக்கொண்டார். எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.24,000/-ம் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவும் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்