செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, பசுவங்கரணை கிராமத்தை சேர்ந்த, லோகநாதன், (42) கட்டட தொழிலாளி, நேற்று வீட்டை பூட்டி விட்டு, காலையில் கொத்தனார், வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவரது மகன் ராஜமாணிக்கம் மதியம் பள்ளி முடிந்து, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாள், உடைக்கப்பட்டு, பீரோ திறந்து உள்ளதை கண்டார். பின், தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். மேல்மருவத்துார் காவல் துறையினர், விசாரணை நடத்தியதில், நான்கரை சவரன் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணம், திருடு போனது தெரிந்தது. மேல்மருவத்துார் காவல் துறையினர், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.