அரியலூர் : அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் தெற்கு தெருவில், வசிப்பவர் பாரதிதாசன் மனைவி ஜெயந்தி (44), இவரது வீட்டிற்கு அருகாமையில், வசிப்பவர் இளையராஜா (44), இவர்கள் வீட்டிற்கு இடையே உள்ள இடத்தில், இளையராஜா மதில் சுவர் எழுப்பினார். இதனை தட்டிக்கேட்ட ஜெயந்தியை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.