வேலூர்: அரக்கோணம் தாலுக்கா காவல் வட்டம், அரக்கோணம் தாலுக்கா காவல் நிலைய சரகம், பெருமாள் ராஜபேட்டை கிராமத்தை சேர்ந்த, தினேஷ்(25) என்பவர் கடந்த 11.07.19 அன்று காலை மின்னல் கிராம ஏரி ஓடை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.
அப்போது அரக்கோணம் வட்டாட்சியர் அவர்கள் தனது குழுவினருடன் அரசு ஜீப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தினேஷ் லாரியில் சுமார் 4 யூனிட் ஓடை மணலை ஏற்றி வந்துள்ளார்.
தடுக்க சென்ற வட்டாட்சியரின் ஜீப்பின் மேல் தினேஷ் லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சித்தும், அரசு ஊழியர்களின் பணியினை செய்யவிடாமல் தடுத்தும், அநாகரிமாக பேசியும், கனிம வளத்தை சேதப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தினேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அரக்கோணம் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் திரு.A.அண்ணாதுரை, அவர்கள் வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததின் பேரில், வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் IPS அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு சிபாரிசு செய்யப்பட்டதின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தினேஷ் என்பவரை நேற்று 31.07.19-ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மணல் கடத்தலுக்கு எதிராக காவல் ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்களின் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்