வேலூர் : வேலூர் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஆற்றில் மணலை மூட்டைகளாக கட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்திச் செல்வதாக வந்த புகார்களின் பேரில் குடியாத்தம் துணை காவல் சூப்பிரண்டு திரு. ராமமூர்த்தி, உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா காவல் ஆய்வாளர் திரு. கணபதி, காவல் உதவி ஆய்வாளர் திரு. சிலம்பரசன், உள்ளிட்ட காவல் துறையினர் , குடியாத்தம் அடுத்த சூராளூர் கொட்டாற்று பகுதியில், ரோந்து சென்றனர். அப்போது சிலர் மணலை மூட்டைகளாக கட்டிக் கொண்டிருந்தனர். காவல் துறையினர் , அவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில், அவர்கள் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (23), மணி (31), கிரி (23), சரத்குமார் (25), என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். மணல் கடத்துவதற்கு பயன்படுத்திய நான்கு மோட்டார் சைக்கிள்களையும் காவல் துறையினர் , பறிமுதல் செய்தனர்.