திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகரில் குற்றங்களை குறைக்கவும், சாலை விபத்துகளை தடுக்கவும் நெல்லை மாநகர காவலர் ஆணையர் வழிகாட்டுதலில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக “ மக்களை நோக்கி மாநகர காவல்”என்ற புதிய முயற்சி துவங்கப்பட்டுள்ளது . இதன்மூலம் ஒவ்வோரு வாரமும் வார இறுதி நாட்களில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் மக்கள் வசிக்கும் இடங்களில் அவர்களை கூட்டி குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு, CCTV ன் முக்கியத்துவம் குறித்து பேசுவார்கள் .
“மக்களை நோக்கி “ திட்டத்தின் முக்கிய அம்சங்கள:-
? மாநகரின் சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்கள் என்ன அதனை தடுக்க செய்ய வேண்டியவை என்ன?
? அந்நிய சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பின் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் .
? பொதுமக்கள் இணைந்து தங்கள் பகுதிகளில் ஊஊவுஏ அமைப்பதன் அவசியம் குறித்து தெரியப்படுத்துவது.
? சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை குறைப்பது.
? ATM PIN நம்பர் கேட்கும் மோசடி செல்போன் அழைப்புகள் இ பரிசு விழுந்துள்ளதாக வரும் தகவல்களை புறந்தள்ளுவது எப்படி!
? காவல்துறையின். கட்டுபாட்டு எண் பகிர்ந்து கொள்ளுதல்
மக்களை நோக்கி மாநகர காவல்துறை திட்டத்தின்மூலம் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும் என நம்புவதாக சட்டம் ரூ ஒழுங்கு, காவல் துணை ஆணையர் ச. சரவணன் கூறியுள்ளார்.
இதன்படி நேற்று (27-8-2019)நெல்லை மாநகரம் தச்சநல்லூர் காவல்நிலையம் வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
“மக்களை நோக்கி” திட்டத்தை ஆர்வத்துடன் செயல்படுத்தும் டவுன் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாராட்டுக்குரியவர்கள்.