சென்னை : தமிழகத்தில் நம்பகமற்ற செயலிகள், மூலம் கடனை பெறுவதை தவிர்க்க வேண்டும். என தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு, அறிவித்துள்ளார். பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நம்பகமற்ற செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம். செயலிகளின் மூலம் கடன் வாங்கும் போது கடன் பெறுபவரின் செல்போனில், இருக்கும் தொடர்பு எண்கள் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்து கொள்கின்றன. மேலும் கடன் வாங்கும் தொகையில், சுமார் 30 சதவீதம் பணத்தை பிராசஸிங், கட்டணமாக பிடித்துக்கொண்டு மீதமுள்ள பணம் கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்கு வரவு வைக்கப்படும்.
மேலும் கடன் பெற்றவர்களின் நண்பர்கள் உறவினர்களின் செல்போனுக்கு கடன் பெற்ற நபர் குறித்து, தவறாகவும் ஆபாசமாகவும், குறுஞ்செய்திகளை மோசடிக் கும்பல் அனுப்புகிறது. இதனால் லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர் பணிபுரியும் இடத்திலும், உறவினர்களிடமும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்படும், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரிய அளவிலான பண இழப்பும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இத்தகைய லோன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம். என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.