சேலம் : சேலம் (08.07.2022) ம் தேதி, சேலத்தின் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலையில், சாக்கடை தண்ணீர் தேங்குவதாகவும், அதை “அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை” எனவும் வாட்சாப்பில், புகார் வந்தது. இது தொடர்பாக சேலம் டவுன் சரக, காவல் உதவி ஆணையாளர், திரு.A.வெங்கடேசன், சேலம் B1 டவுன் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.P.பிரகாஷ், மற்றும் காவலர்கள் தானாக முன்வந்து மேற்படி பள்ளிக்கு முன்பு தேங்கியிருந்த சாக்கடை கால்வாய் அடைப்பை JCP இயந்திரத்தை வரவழைத்து சரிசெய்தார்கள். இந்த நற்செயலைகண்ட பொதுமக்கள், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பெற்றோர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர்கள் சேலம் மாநகர வெகுவாக பாராட்டினார்கள்.