மதுரை : மதுரை மாநகராட்சி செல்லூர், வாகன பணிமனையில், ஆணையாளர் திரு . சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 செல்லூரில், உள்ள மாநகராட்சி வாகன பணிமனையில், திடக்கழிவு மேலாண்மை பணிக்கான குப்பை அள்ளும் வாகனங்கள், திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள், டிப்பர் லாரிகள், மண்கூட்டும் வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் தினந்தோறும் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பணிமனையில், உள்ள டீசல் நிலையம், பேட்டரி வாகனங்கள், பதிவேடுகள், ஆன்லைன் மூலம் வாகனங்களை கண்காணிக்கும் ஜி.பி.ஆர்.எஸ். முறை செயல்பாடு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து நான்கு மாசி வீதிகளில் தேங்கியுள்ள குப்பைகள், மண்கூட்டும் வாகனம் மூலம் தெருக்களை தூய்மைப்படுத்தும் பணிகளை, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் லெட்சுமணன். நகர்நல அலுவலர் ராஜா, உதவிப் பொறியாளர் (வாகனம்), திரு .சாலமன் பிரபு, மக்கள் தொடர்பு அலுவலர் திரு. மகேஸ்வரன், சுகாதார அலுவலர் திரு. சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் திரு. சுப்புராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி