காஞ்சிபுரம் : இன்று (20.05.22) காஞ்சிபுரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், தலைமையில் காவல்துறையினர், மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை, பின்வருமாறு எடுத்துக் கொண்டனர். ”கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி” ”அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில், தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம், என உறுதி கூறுகின்றோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும், மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை, எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம்.”
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்