கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவை மாநகரில் நடைபெறும் குற்ற நிகழ்வுகள் ,மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது, மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவணப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக வாரம் ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தப்படும் . இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கலந்து கொள்வார்கள். அவர்கள் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் தாங்கள், மேற்கொண்ட புலன் விசாரணை குறித்து தெரிவிப்பார்கள்.
அதுவும் ஆவணப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இனி கோவை மாநகருக்கு வரும், காவல் அதிகாரிகள் முன்பு நடைபெற்ற குற்ற நிகழ்வுகள், குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும். வி. ஐ. பி களின் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்தாலும் ,அறிந்து கொள்ள முடியும். இந்த ஆவணம் நல்ல வழிகாட்டியாகவும், அடுத்து தவறுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.