திண்டுக்கல் : 07.03.2022 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.லாவண்யா அவர்களின் மேற்பார்வையில் ஒட்டன்சத்திரம்உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் பெண்களின் மேன்மையை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா