கோவை: கோவையில் போலீஸ் குடியிருப்பில் தொடர் கொள்ளை நடத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார் .சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கோவைபோலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடியிருப்பு உள்ளது.இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணம்,லேப்டாப், செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் .
போலீஸ் குடியிருப்பில் கோவை: கொள்ளை நடத்திய ஆசாமியை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் உதவி போலீஸ் கமிஷனர் வின்சென்ட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இந்த கொள்ளையனை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர்.இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ள வீடுகளில் திருடியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவரை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செந்தில்குமார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும், கடந்த 2009ஆம் ஆண்டில் இன்ஸ்பெக்டர் ஒருவரை பழிவாங்கும் நோக்கத்தில் ஆயுதப்படை வாகனத்தை கடத்திச் சென்று ஏரியில் தள்ளிவிட்ட வழக்கில் கைதாகி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜாமினில் வெளியே வந்து லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார் இந்த நிலையில் அவர் ஓட்டிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது இதில் ஒருவர் உயிரிழந்தார் இதனால் அந்த வேலையும் அவருக்கு பறிபோனது. இதைத்தொடர்ந்து செந்தில்குமார் பணத்துக்காக சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக போலீசாரின் வீடுகளை நோட்டமிட்டுதன்னை போலீஸ்காரர்என்று கூறி பல்வேறு இடங்களில் கைவரிசை காட்ட தொடங்கினார் . தற்போது கிருஷ்ணகிரி உள்ள போலீஸ் குடியிருப்பில் கைவரிசை காட்டிய போது ஊத்தங்கரை போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து ஊத்தங்கரை போலீசார் கோவை போலீசாருக்குதகவல் கொடுத்தனர் அதன்பேரில் கோவை தனிப்படை போலீசார் அங்கு சென்று செந்தில்குமாரை காவலில் எடுத்து கோவைக்கு அழைத்து வந்தனர் . விசாரணையில் அவர் கோவையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் திருடியதை ஒப்புக்கொண்டார் .திருடிய நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:திருட செல்லும்போது போலீஸ்காரர் போல முடியை கட்டிங் செய்து|போலீஸ் தோற்றத்துடன் செல்வதால் என்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்.பகலில் நோட்டமிட்டு எந்த வீட்டில் ஆட்கள் இல்லையோ அந்த வீடுகளில் கொள்ளை நடத்துவேன்.சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த திருட்டுகளில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்..