திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜாகாளீஸ்வரன் அவர்கள், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.டி.வி.கிரண்ஸ்ருதி,இ.கா.ப., அவர்கள், திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துனை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்கள், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.R.குனசேகரன் அவர்கள், திருவண்ணாமலை நகர குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.N. கோமளவள்ளி அவர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இனைந்து.
.திருவண்ணாமலை நகரில் கஞ்சா மற்றும் ரவுடிசத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ஸ்ட்ராமிங் ஆபரேசன் நடத்தியதில் கூட்டுக்கொள்iயில் ஈடுபட முயன்ற 1.திருவண்ணாமலை நகரம், பே கோபுரம் 10வது தெருவை சேர்ந்த வெற்றிவேல் (எ) லொட்டதீனா வ/23 த/பெ பன்னீர், 2.பே கோபுரம் 4வது தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் வ/25 த/பெ விஜயகுமார், 3. பே கோபுரம் 7வது தெருவை சேர்ந்த பாலாஜி (எ) பூனை பாலாஜி வ/45 த/பெ லட்சுமணன், 4.பே கோபுரம் 10வது தெருவை சேர்ந்த ஐயப்பன் வ/31 த/பெ கங்காதரன், 5. பே கோபுரம் 2வது தெருவை சேர்ந்த காளிமுத்து வ/26 த/பெ A C ராஜா, ஆகிய 5 சந்தேக நபர்கள், கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்ற பே கோபுரம் 4வது தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வ/40 த/பெ கௌரி கவுண்டர்.
ஆகிய நபர்களை கைது செய்த அவர்களிடமிருந்து 1 கத்தி 2 கூர்மையான ஆயுதங்கள் 57 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் உரிய ஆவனங்கள் இல்லாத சந்தேகத்திற்கிடமான 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்பட்ட வெற்றிவேல் மீது 1 வழிப்பறி வழக்கு மற்றும் 1 கஞ்சா வழக்கும், அருண்பாண்டியன் மீது 1 திருட்டு வழக்கு மற்றும் 1 கஞ்சா வழக்கும், பாலாஜி மீது 5 திருட்டு வழக்குகளும், கிருஷ்ணமூர்த்தி மீது 20 கள்ளச்சாராய மற்றும் கள்ள மது பாட்டில்கள் விற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்