சென்னை : HDFC வங்கி லிமிடெட், ஏரியா மேனஜர் திரு.வெங்கட்ராமன், என்பவர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், விஜய் மற்றும் அவரது தாய் கீதா ஆகிய இருவரும் போலியான ஆவணங்கள் தயார் செய்து, HDFC வங்கியின் நுகர்வோர் கடன் மூலம் Apple Mac Book, லேப்டாப் மற்றும் Sony TV, வாங்கி தவணை தொகையை கட்டாமல் ஏமாற்றிவருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு தனிப்படை போலீசார், விசாரணையில் விஜய், என்ற பெயரில் விக்னேஷ்குமார் மற்றும் அவரது தாய் கீதா, ஆகிய இருவரும் போலியான முகவரியிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து, ஆள்மாறாட்டம் செய்து HDFC , வங்கியின் நுகர்வோர் கடன் மூலம் லோன் பெற்று Apple Mac Book, லேப்டாப் மற்றும் Sony TV ஆகியவற்றை வாங்கி தவணை தொகையை செலுத்தாமல் ஏமாற்றியது உண்மையென தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷ்குமார் (27) , என்பவரை நேற்று (28.04.2022) கைது செய்தனர்.