பெரம்பலூர்: தமிழக அமைச்சரின் உதவியாளர் என போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுவாச்சூர் அருகே தனலட்சுமி மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 30.03.2022-ம் தேதி பன்னீர்செல்வம் (70/22), த/பெ ராமையா, 16 G/1, தெற்கு செங்குந்தர் தெரு, மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் என்பவர் தான் நீர் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்களின் உதவியாளர் என கூறி தனது தங்கையின் கணவர் கட்டபொம்மன் (65), த/பெ முருகையன் என்பவருக்கு இதயநோய் சிகிச்சைக்கு சேர்த்து சிகிச்சை பெற்றதாகவும்.
பின்னர் சிகிச்சைக்கான தொகை ரூபாய் 3500 கேட்டதற்கு தராமல் அமைச்சரின் உதவியாளர் என போலியாக தயாரித்து வைத்திருந்த போலியான அடையாள அட்டையை காண்பித்து ஏமாற்றியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தனலட்சுமி மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் மேலாளர் மேற்படி அடையாள அட்டை போலீயானது என்பதை உறுதி செய்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை அறிந்த பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகேசன் நிலைய காவலர்களுடன் மேற்படி மருத்துவமனைக்கு சென்று போலியான அடையாள அட்டையை காண்பித்து மோசடி செய்த பன்னீர்செல்வம் என்பவரை கைது செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.