கோவை : போத்தனுார், அடுத்த செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, (63), இவர், எட்டு வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுவன், பெற்றோரிடம் தெரிவித்தான். புகாரின் பேரில், செட்டிபாளையம் காவல் துறையினர், குப்புசாமியை கைது செய்து, விசாரித்தனர். மேலும் ஒரு சிறுவனை இதுபோல், தொந்தரவு செய்ததும் தெரிந்தது. குப்புசாமி மீது போக்சோ சட்டத்தில், வழக்குப்பதிவு செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்