கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு . பாலகிருஷ்ணன், உத்தரவின் பேரில் காவல் துறையினர், மாநகர் முழுவதும் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், பெரிய கடை வீதி காவல் ஆய்வாளர் திரு. பிரபு, தாஸ், காவல் உதவி ஆய்வாளர் திரு. ஆசீர்வாதம், ஆகியோர் உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில், இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் , அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பக்ருதீன் (30), என்பது தெரியவந்தது.