சென்னை : சென்னை மும்பையில் இருந்து , ரெயில் மூலம் சென்னைக்கு போதை மாத்திரை, போதை ஊசி கடத்தி வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு , ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படி நடந்து கொண்ட, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்களிடம் போதை மாத்திரைகள், போதை ஊசி போட, பயன்படுத்தும் சீரஞ்சீகள், இருந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னை, கீழ்கட்டளை ஈஸ்வரன் நகரை சேர்ந்த ராஜ்குமார் (28), சென்னை தரமணி பாரதி நகரைச் சேர்ந்த சூர்யா (23), என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மும்பையிலிருந்து, போதை மாத்திரைகளை வாங்கி வந்து, வடசென்னை பகுதியில் விற்பனை, செய்வது தெரிய வந்தது. தண்டையார்பேட்டை காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இவர்களிடமிருந்து 1250 மாத்திரைகள், 20 ஊசி மருந்துபாட்டில்கள், 20 சிரஞ்சீகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.