நீலகிரி : நீலகிரி மாவட்டம், கக்கனல்லா சோதனை சாவடியில், காவல் துறையினர், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த காரை, சோதனைக்கு நிறுத்திய போது, அதில் இருந்தவர் காரை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் தப்பி ஓடி மறைந்தார்.காவல் துறையினர் , காரை சோதனை செய்ததில், அதனுள், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., (மெத்திலின் டியோச்சி மெதம்பேட் எமைன்) என்ற போதை பொருள், 100 கிராம் கடத்தி வருவது, தெரியவந்தது. காருடன் அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் , மேல் விசாரணைக்காக மசினகுடி காவல் துறையில், ஒப்படைத்தனர். மசினகுடி காவல் துறையினர், தப்பியோடிய நபரை, தேடி வருகின்றனர்.