திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் திரு. பாஸ்டின் தினகரன், காவல் உதவி ஆய்வாளர் திரு, கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர், மன்னவனூர் கைகாட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில், நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (33), என்று தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை காவல் துறையினர், சோதனை செய்தனர். அப்போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் போதை காளான் இருந்தது.
அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் காளான்களை காவல் துறையினர், பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கஞ்சா, போதை காளான்களை விற்றது தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். இவர் மீது கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த வழக்கு நிலுவையில், இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக காவல் துணை சூப்பிரண்டு திரு. சீனிவாசன், கூறுகையில், போதை காளான் வைத்திருப்பதும், அதனை வாங்கி பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றம் ஆகும். எனவே போதை காளான் வாங்கி பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.