திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தொடர்ந்து அபராதம் விதித்தும், மீண்டும் மீண்டும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை, விற்பனை செய்த 2 கடைகளுக்கு, எஸ்பி. திரு. சீனிவாசன், முன்னிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிகழ்வின் போது டவுன் டி.எஸ்.பி திரு .கோகுலகிருஷ்ணன், நகர் வடக்கு ஆய்வாளர் திரு .உலகநாதன், மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் இதுபோல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி. திரு.சீனிவாசன், எச்சரிக்கை விடுத்தார்.
