கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியைக் கடந்த 20.03.2022-ம் தேதி காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. ராமதாஸ் அவர்கள் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த சபரி(21) என்பவர் அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. எனவே,மேற்படி நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க அழைத்திடுங்கள் 181,1098 மற்றும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.