சென்னை: பூக்கடை காவல் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் வசித்த 17 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்த கொர்லா நரசிம்மன் என்பவர், துறைமுகம் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் போக்சோ சட்டத்தில் கைது. Harbour AWPS police arrested Korla Narasimman, under POCSO Act, who married a 17 year old girl lived in her relative’s house. தெலுங்கானாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சென்னை, பூக்கடை காவல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ள நிலையில், 22.02.2022 அன்று சிறுமி காணாமல் போனதால், சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் சிறுமியை ஒரு நபர் அழைத்துச் சென்றது தெரியவந்ததின்பேரில், காவல் குழுவினர் விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, சிறுமியை அழைத்துச் சென்ற கொர்லா நரசிம்மன் என்பவரை கண்டுபிடித்து, அவருடன் இருந்த மேற்படி சிறுமியை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையில் கொர்லா நரசிம்மன், மேற்படி 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி வழக்கு கொத்தவால்சாவடி காவல் நிலையத்திலிருந்து, துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, சிறுமி காணவில்லை பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, போக்சோ, குழந்தை திருமண தடைச்சட்டம், மற்றும் இத.ச. பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டு, எதிரி கொர்லா நரசிம்மன் (வ/30) தெலுங்கானா மாநிலம் என்பவரை கைது செய்தனர். மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.