சென்னை: கடந்த 2021ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லையில், 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ராஜா என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், மேற்படி குற்றத்தை மறைத்த எதிரியின் தாய் உட்பட 3 பெண்கள் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டனர். In the year 2021, Washermenpet AWPS Police already arrested Raja under POCSO Act for sexually harassing a 11 year old girl and made her pregnant, and the team today arrested 3 women including Raja’s mother for hiding the crime. கடந்த 2021ம் ஆண்டு சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் வசித்த 11 வயது சிறுமியிடம் பாலியல் உறவு கொண்டு, கர்ப்பமாக்கிய து தொடர்பாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) விசாரணை மேற்கொண்டு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மேற்படி சிறுமியை கர்ப்பமாக்கிய ராஜா (வ/35) பழைய வண்ணாரப்பேட்டை என்பவரை 28.04.2021 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி 11 வயது சிறுமியிடம் எதிரி ராஜா அடிக்கடி பாலியல் உறவு கொண்டதும், இந்த சம்பவத்தை அறிந்த எதிரி ராஜாவின் தாயார் பேபி (எ) கௌசல்யா, புவனேஸ்வரி மற்றும் நாகலஷ்மி ஆகியோர் எதிரிக்கு உடந்தையாக செயல்பட்டு, மேற்படி குற்றத்தை மறைத்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி வழக்கில் எதிரிக்கு உடந்தையாக செயல்பட்டு குற்றத்தை மறைத்த 1.எதிரி ராஜாவின் தாயார் பேபி (எ)கௌசல்யா (வ/40) பழைய வண்ணாரப்பேட்டை, 2) புவனேஸ்வரி (வ/25) கொரட்டூர், 3) இவரது தோழி நாகலஷ்மி (வ/48) பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.