ஈரோடு : கோபி அருகே உள்ள நம்பியூர் அழகம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது20).இவர்திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் அவினாசி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார். இவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்ப நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தங்கராஜ், குடிபோதையில் சிறுமியை அடித்து உதைத்தாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி திருமண வயது அடையாத விவரம் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து தங்கராஜை கைது செய்தனர்.