மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை போக்குவரத்து, காவல்நிலையம் சார்பாக, போக்குவரத்து விழிப்புணர்வு சம்மந்தமாக, 10 ஆயிரம் நபர்கள் பங்குபெரும் மாபெரும் மினிமாரத்தான் போட்டி, வருகின்ற (22.05.2022) , அன்று காலை 06.00 மணிக்கு, திருமோகூர் சாலையில், உள்ள காளிகாப்பான் சந்திப்பில் நடைபெற உள்ளது. இந்த மினிமாராத்தான் போட்டியில், கலந்துகொள்ள விருப்பமுள்ள 14 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்களது பெயர்களை, இணையதள முகவரியில், முன்பதிவு செய்து கொண்டு, போட்டி நடைபெறும் நாளில் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மினிமாரத்தான் போட்டியில், பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பரிசுகள் ஆண்கள், பெண்கள் 14 முதல் 63 (50 நபர்களுக்கு), டி.சர்ட் மற்றும் மெடல், சேலை மற்றும் மேலும், இப்போட்டியில் கலந்து கொள்ளுபவர்களில், லக்கி வின்னர் ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிள்ள சைக்கிள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, வழங்கப்பட உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி