கோவை : கோவில்பாளையம், கீரணத்தம், தனியார் அபார்ட்மென்டை சேர்ந்த மாரியப்பன் மகள் திவ்யா, (25), இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் ஸ்கூட்டரில் கீரணத்தத்தில் இருந்து சாம்பிராணி குட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே வழியில் வந்த நல்லாம்பாளையம், மணிகண்டன் மகன் அரவிந்தன், (23), என்பவர் ஸ்கூட்டரை எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து கீழே விழுந்த திவ்யாவை, கத்தியை காட்டி மிரட்டி, இரண்டு சவரன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்தவர்கள், அரவிந்தனை துரத்தி பிடித்து கோவில்பாளையம் , காவல் துறையினரிடம், ஒப்படைத்தனர்.