சென்னை : நுங்கம்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பைசான் என்பவர், நுங்கம்பாக்கம் காவல் குழுவினரால் கைது. 40 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், பணம் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல். Nungambakkam Police arrested Faisan for possession of Gutkha tobacco products. 40 Kgs Gutkha tobacco products, cash and a two wheeler were seized. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் 23.03.2022 அன்று நுங்கம்பாக்கம், வடக்கு மாடவீதியில் கண்காணித்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்து, பையை சோதனை செய்த போது, பையில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை விற்னைக்காக பதுக்கி வைத்திருந்த பைசான் (வ/24) அரும்பாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 40 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள், ரொக்கம் ரூ.900/- மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.