திருவள்ளூர் : பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துனிப்பை பயனபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொன்னேரி நகராட்சி சார்பில் பிலாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணியை நகர்மன்றத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
இந்த பேரணியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மஞ்சப்பை பயன்படுத்துவோம் என முழக்கங்களை எழுப்பியபடி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியின் முடிவில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த பேரணியில் நகர்மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் தனலட்சுமி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்