சேலம்: சேலம் மாநகராட்சி 21 வது கோட்டத்தில் உள்ள அரியாகவுண்டம்பட்டி பகுதியில் குப்பைகளை அரைத்து உரம் தயாரிப்பதற்கான இயந்திர கூடம் சுமார் 80 லட்சம் செலவில் கட்டுவதற்காக மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இதனையடுத்து பணி தொடங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றிருந்தனர், இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் குப்பை அரைக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து கோஷங்களை எழுப்பினர்,அங்கிருந்தமாநகராட்சி உதவி பொறியாளர் முருகன் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார், சமாதானப் பேச்சுவார்த்தையில் திருப்திஅடையாததால்பொதுமக்கள்அங்கிருந்துகலைந்துசெல்லவில்லை,இதனையடுத்துஅதிகாரிகள்பணிதொடங்காமல் திரும்பி வந்து விட்டனர், குப்பை அரைக்கும் தொழிற்சாலைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.