தேனி : உத்தமபாளையம் நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் தெய்வம் கூறும்போது உத்தமபாளையம்பைபாஸ் கிராமச் சாவடிகோம்பை ரோடு மாநில நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பலமுறை பாரதிய ஜனதா கட்சி சார்ந்து உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி புகார் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் பார்வையிட்டு சாலையை சரி செய்து தருகின்றோம் என்று கூறினர். தார் சாலையை மண் சாலையாக மாற்றியது தான் மிச்சம். மண் சாலையை மீண்டும் தார் சாலையாக மாற்ற உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி சாலைகளை பார்வையிட்டு பொதுமக்களுக்காக நிரந்தரமாக சரி செய்து தர வேண்டும் இவ்வாறு கூறினார்.