சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) துவக்க நாள் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை வட்டத்திற்கான வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தியில்), மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு, சிவகங்கை வருவாய் கிராமங்களான காஞ்சிரங்கால், கொட்டகுடி, பையூர் பிள்ளைவயல், மேலவாணியங்குடி, கடம்மங்களம், சூரக்குளம், புதுப்பட்டி, அரசனி, பொன்னாங்குளம், பனையூர், கீழக்கண்டனி, சுந்தரநடப்பு (துவங்கல்), ஆலங்குளம், வேம்பன்குடி ஆகியப் பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம்ருந்து, பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் என 93 மனுக்களைப் பெற்று, மனுதாரர்களின், மனுக்கள் மீது உரிய தீர்வு காணும் வகையில், அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், இன்றையதினம் நடைபெற்ற வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தியில்), திருப்பத்தூர் வட்டத்தில் 28 மனுக்களும், காளையார்கோவில், வட்டத்தில் 35 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 55 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 29 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 52 மனுக்களும், மானாமதுரை வட்டத்தில் 37 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 37 மனுக்களும், சிங்கம்புணரி வட்டத்தில் 32 மனுக்களும் என மொத்தம் 398 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மேற்கண்ட மனுக்களின், மீது அலுவலர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, கள ஆய்வு மேற்கொண்டு ஒருவாரத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .ப.மதுசூதன் ரெட்டி, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு .ப.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு . மு.முத்துக்கழுவன் (சிவகங்கை), திரு . சி.பிரபாகரன், (தேவகோட்டை), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு .ந.மங்களநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), மு.காமாட்சி, உதவி ஆணையர் (ஆயம்) ம.ரா.கண்ணகி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சி.ரெத்தினவேல், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) திரு .மு.வேல்மணி, மற்றும் அலுவலக மேலாளர் (பொது) திரு .எ.மேசையாதாஸ், சிவகங்கை வட்டாட்சியர் திரு .பி.தங்கமணி, சிவகங்கை வட்டாட்சியர்கள் திரு .இரா.மங்கையர்திலகம், (சமூக பாதுகாப்புத் திட்டம்), திரு .இரா.கண்ணன், (குடிமைப்பொருள்), திரு .ஒ.பி.பாலாஜி (ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்), எம்.செல்வராணி (கேபிள் டிவி வட்டாட்சியர்), திரு . பி.மூர்த்தி (நிலஎடுப்பு தேசிய நெடுஞ்சாலை) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி