காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் நேற்று முன்தினம் 10.08.2019 ஆம் தேதி தன்னுடைய சீருடை அழுக்கடைந்தது கூட தெரியாமல் ஒரு நபர் பொது தரிசன வழியில் மைக் மற்றும் ஒலிபெருக்கி மூலம் கூட்டத்தை மிக நேர்த்தியாக ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்க்க அந்த நபர் தன்னிடம் உதவி என்று கேட்டவர்களுக்கு இயன்றவரையில், இன்முகத்துடன் செய்து கொடுத்தும் திடீரென ஒரு இளைஞர் கையில் குழந்தையுடன் வந்து மனைவி பின்னால் நெரிசல் சிக்கிக் கொண்டார் எனக்கூற உடனடியாக தன்னிடம் உள்ளவர்கள் மூலம், அவர்களை மீட்டு ஆசுவாசப்படுத்தி மீண்டும் வரிசையில் இணைய வைக்கிறார். அவர்கள் மனதார மீண்டும் மீண்டும் நன்றி கூறினர்.
ஒலிபெருக்கியில் பயனுள்ள தகவல்களை திரும்பத் திரும்ப மக்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார். பொதுமக்கள் நிற்கும் இடம், உத்தேசமாக தரிசனம் செய்ய ஆகும் நேரம், எவ்வழியாக செல்வது, காவல் துறையின் ஏற்பாடுகள் ஆகியவற்றை மக்கள் மனதில் பதியும் வண்ணம் கூறுகிறார். இதை எதையும் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சிலரைப் போல் சுய விளம்பரம் தேடவில்லை.
அவர் வேறு யாருமல்ல காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D. கண்ணன் அவர்கள். மக்கள் பணியில் சிலரைப்போல் VIP பக்தர்களை மட்டும் கவனித்து சீன் போடாமல் தன் மென்மையான அணுகுமுறையில் மக்கள் மனதை வென்றவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். நிச்சயமாக இவர்தான் சபாஷ் காவல் கண்காணிப்பாளர், கேமரா முன்னிலையில் VIPகளுக்காக பணியில் இருந்த ஆய்வாளரை உண்மை நிலை மறந்து திட்டிய அதிகாரிகள் மத்தியில் மக்கள் தேவை என்னவென அறிந்து சமயோசிதமாக செயல்படும் இவர் மேன்மையானவரே. தற்போது காஞ்சிபுரத்திற்கு தேவை அர்ப்பணிப்பு காவல் பணியே. பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள் திரு.கண்ணன் அவர்கள் அவருடைய அணுகுமுறையால் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.