திருப்பத்தூர்: 110 கோடி மதிப்பில் அமையவிருக்கும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிக தொலைவில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களை பார்த்து கொடுக்க ஏதுவாக தங்குமிடம் அமைக்கப்படும் எவ.வேலு பேட்டிதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய கலெக்டர்அலுவலககட்டுமானப்பணிகளைபொதுப்பணித்துறைஅமைச்சர்எ.வ.வேலுஆய்வுமேற்கொண்டா.திருப்பத்தூர் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் ரூ.109.71 கோடி மதிப்பில் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கானபணிகள் நடந்து வருகிறது. அப்போது, செய்தியாளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது புதிதாக கட்டப்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் இடம் பெறும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம், 300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக்கூட்ட அரங்கம், 3 சிறிய கூட்டரங்கள், கழிவறை, செயற்கை நீருற்றுடன் கூடிய பூங்கா, கட்டிடத்தை சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், மழைநீர்வடிகால் அமைப்பு அலங்கார மின்விளக்குகள், குடிநீர் வசதி, முகப்பு அலங்கார வளைவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த புதிய கட்டிடத்தில் கொண்டு வரப்பட உள்ளன. கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவை அனைத்தும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு முதல் அமைச்சரை அழைத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படும் என கூறினார்.
மேலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொண்டு வாழ்பவர்கள் இங்கேயே தங்கி அரசு அலுவல்களை பார்த்து தங்குமிடம் மற்றும் அவர்களுக்காக உணவு கேண்டின் அமைக்கப்படும் என தெரிவித்தார்இதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலேயே உள்ளனர். அத்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நேரடியாக பேசி உள்ளேன் அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்தவுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றன் பின்ஒன்றாகஇங்கேயேசெயல்படவழிவகைசெய்யப்படும்மேலும் திருப்பத்தூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மருத்துவக் கல்லூரியை வேண்டும் என்று கேட்டு வருகின்றனர் அதனை திருப்பத்தூர் மாவட்ட மக்களிடம் இணைந்து நானும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன் எனவும் கூறினார்.